பொழுதுபோக்குவதற்காக என்றில்லாமல், உண்மையிலேயே எதன் மீதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று வரிசைப்படுத்திப் பாருங்கள்.. ஒரு நீண்ட அட்டவணையை கையில் வைத்திருப்பீர்கள்.. எனக்கும் அப்படித்தான்.. என் கையில் இருக்கும் அட்டவணையில், நான் எதில் சிறந்தவனாக இருக்கிறேன் என்றால், எதிலும் இல்லை..
இது என்னுடைய பிரச்சனை மட்டும் இல்லை, மொத்த தமிழர்களின், மொத்த இந்தியர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கொரியாவில், ஒருவன் வேதியியல் படிக்கிறான் என்றால், அதனை மட்டுமே சிந்திக்கும் படி, தன் மூளையை அவன் மாற்றிவைத்திருப்பான்.. குறிப்பாக அந்த வேதியியலில், பருப்பொருள் வேதியியல், அதிலும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் சிலிக்கானை பயன்படுத்தும் ஆற்றலுக்கான பருப்பொருட்கள், அதிலும் ஒற்றை படிம சிலிக்கான்.. என மிக நுண்ணிய ஒரு பகுதியில், அனைத்து நுணுக்கங்களையும் அறிந்துவைத்திருப்பார்கள்..அவரிகளிடம், படிகமற்ற சிலிக்கானைப்பற்றி கேட்டாலோ, சிலிக்காவைப்பற்றி கேட்டாலோ, தெரியாது என்று சட்டென கூறிவிட்டு கடந்துவிடுவார்கள். எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபொழுதும் வருவதே இல்லை.
ஆனால், நம்மவர்களுக்கு, ஒரு மணிநேரமும், வாசிக்க ஒரு பக்கத்தையும் கொடுத்துவிட்டால், அந்த பக்கத்தில் என்ன இருந்தாலும் அதில் தனக்கென ஒரு கருத்தை வைத்திருப்பார்கள்.
கொரியாவில், ஒரு தனிப்பட்ட கொரியனை நீங்கள் சந்தித்து உரையாற்றுகிறீர்கள் என்றால், இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி இவர்கள் இவ்வளவு பணக்கார நாடாகவும், என்னெற்ற தொழிற்நுட்பம் கொண்ட நாடாகவும் உருவாகியிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயம் சந்தேகிப்பீர்கள்.. ஆனால், அந்த ஒரு கொரியனின் துறையை அறிந்துகொண்டு, நம்மூரில் அதே துறையில் கொடிகட்டி பறக்கும் ஒருவருடன் உரையாட வைத்தீர்கள் என்றால், உங்களுக்கு புரியும் அந்த கொரியனின் உண்மையான திறமை..
நாம் நிறைய தெரிந்துகொள்கிறோம், ஆனால் நுனிபுல்லை மட்டுமே அசை போட விரும்புகிறோம்.. ஆனால் அவர்கள் ஒற்றை துறையில் தங்களின் முழு ஆற்றலையும் செலவிடுகிறார்கள். அப்படியே, பலரும், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பொழுது, மொத்த நாடும் வளர்ச்சி அடைகிறது.
ஒரு துறை தேர்வு
↓
அதன் உட்பிரிவு தேர்வு
↓
அதிலும் மிக நுணுக்கமான பகுதி
↓
அதிலேயே முழு கவனம்
↓
ஆழமான நிபுணத்துவம்
இந்தியாவில் இப்பொழுது அடிப்படை அறிவியலுக்கு போதுமான பணத்தை ஒதுக்குவதே இல்லை.. ஆயிரம் ஆய்வு செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டால், அதில் அதிகபட்சம் நூறு செயல்திட்டங்களுக்குக் கூட பண உதவி கிடைப்பதில்லை. அணுக்கரு ஆய்விலோ, ஆற்றல் சம்பந்தமான ஆய்வுகளிலோ, இயற்கை அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல் போன்றவற்றுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை.
அடிப்படை அறிவியலுக்கு குறைந்த நிதி
↓
ஆய்வு வாய்ப்புகள் குறைவு
↓
அரசு திட்டங்கள் – Trend அடிப்படையில்
↓
ஆய்வாளர்கள் திணிப்பு
↓
நிலையான வளர்ச்சி இல்லை
அடிப்படை அறிவியல் இல்லை
↓
புதிய தொழில்நுட்பம் இல்லை
↓
மற்ற நாடுகளை பின்தொடரும் நிலை
அடிப்படை அறிவியல் அற்ற சமூகம் எதை உருவாக்கும், நல்ல வேலையாட்களையும், அடிமைகளையுமே உருவாக்கும். அதனால் நாம் இனியாவது, எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை விடுத்து, ஒற்றை துறையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய மொத்த ஆற்றலையும் செலவு செய்து, கற்க வேண்டும். இனிவரும் நாட்களிலாவது இன்னொரு ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய், போஸ், ராமன், ராமசந்திரன், சந்திரசேகர், இராமானுஜம் உருவாக வேண்டும்..
சகா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக