நமக்கு ஏதாச்சும் அடிபட்டு காயமாகிடிச்சின்னா நமக்கு எந்த தனிமத்த (element) ரொம்ப பிடிக்கும்?
இப்படியான கேள்வியை வேதியியல் படிக்கும் மாணவர்கள் விளையாட்டாக கேட்பது வழக்கம்.. அதற்கான பதிலாக அவர்கள் சொல்வது,
'ஹீலியம்.. ஏன்னா அது காயத்தை ஹீல் பண்ணிடுமே... ஹஹஹ'
இதற்கு அந்த ஹீலர் பாஸ்கரே பரவாயில்லையே என்ற முடிவுக்கு எதிரில் நிற்பவர் வந்துவிடுவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது..
அந்த வேளையில், இன்னொருவர் கமுக்கமாக, 'டாக்டருக்கு புடிச்ச தனிமம் என்னன்னு டக்குன்னு சொல்லு பாப்போம்' என்று கேட்க, விழிபிதுங்கி நிற்கும் அந்த ஹீலர் பாஸ்கரின் அனுதாபியிடம், மனசாட்சியே இல்லாத நம்முடைய டக்குவாயன் 'கியூரியம் (96Cm).. ஏன்னா அதுல கியூர் இருக்கே' என்பார்..
சரிசரி ம்ச் கொட்டாதீர்கள்.. சட்டென மேட்டருக்கு வருகிறேன்..
இப்படியாக தனிமம் என்று சொல்லப்படுபவைகள் யாவும் சிங்கம் போல சிங்கிலாகவே இருந்துவிடுவதில்லை.. நிலைப்பு தன்மையை பெறுவதற்காக சேர்மமாக இயற்கையாகவே மாறிவிடுவதுண்டு.. அதில் ஹைட்ரஜன் (H2), ஆக்சிஜன் (O2), நைட்ரஜன் (N2) போன்றவைகளும் அடங்கும்.. ஆனால் ஹீலியம் போன்ற சில தனிமங்கள் தனிமங்களாகவே இருக்கும்.. குறிப்பாக ஹீலியத்தின் குடும்ப உறுப்பினர்களான Ne, Ar, Kr, Xe போன்றவைகளும் சிங்கம் போல சிங்கிலாக வாழும் 80s, 90s கிட்ஸ்... இவர்கள் யாருடனும் வாய்க்கால் தகராறு செய்யாதவர்கள்.. Chemically inert - noble gases..
ஆவர்த்தன அட்டவணையில் முதல் இடம் பிடிப்பது ஹைட்ரஜன் அடுத்தது ஹீலியம்.. அப்படியானால் அதன் நிறையும் அந்த வரிசையிலேயே அமையும்.. இருப்பதிலேயே எடை குறைந்த காற்று ஹைட்ரஜன் (H2) அடுத்தது ஹீலியம் (He).. அதனால்தான் ஹீலியம் அடைத்த பலூன் கனமான ஆக்ஸிஜன், நைட்ரஜன் நிறைந்த காற்றில் எளிதில் மேலெழும்புகிறது..
ஆனால் ஹீலியத்தின் நிறை ஹைட்ரஜனை விட சற்று அதிகமானது.. அதனால்தான் கதிரவனில் அணுக்கரு இணைவு நிகழ்வு நடக்கையில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுகிறது.. அணுக்கரு இணைவு, அதிகப்படியான ஆற்றலை வெளியிட்டபின் உருவான எடை அதிகமான (கம்பேர் டு ஹைட்ரஜன்) ஹீலியம் கதிரவனின் உட்பகுதிக்குள் அமிழ்ந்துவிடுகிறது.. எடை குறைந்த ஹைட்ரஜன் மேலெழுந்து மீண்டும் அணு பிளவுக்கு ஆயத்தமாகிறது.. இந்த சம்பவம் ஒரு கட்டத்தில் நிற்க வாய்ப்பிருக்கிறது.. அதாவது கதிரவனில் உள்ள அனைத்து ஹைட்ரஜனும் ஹீலியமாக மாறிவிட்டால்...!
அதற்குள் நாம் வேறு சூரிய குடும்பத்திற்கு வாக்கப்படவேண்டும்.. இல்லையேல் இந்த பால்வெளி மண்டலத்தை கடந்து மற்றொன்றை அடையவேண்டும்.. அதுவுமில்லை என்றால் இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) கூப்பரைப் போல் ஒரு வார்ம் ஹோலை பிடித்து அடுத்த எல்லைக்கு சென்று டெஸ்சராக் மூலம் நான்காவது, ஐந்தாவது பரிமாணத்தில் நேரத்தை கடந்து, இறந்த காலத்திற்கு சென்று மீண்டும் வாழலாம்.. இப்படியெல்லாம் போகவில்லையாயின் கதிரவன் இறந்தபின் யார் நம் சாதி, மொழி, மதத்தை பற்றி பெருமை பீற்றிக்கொள்ளமுடியும்..
போறோம் பீத்துறோம்..
-சகா..
03/11/2022