நீங்க ஒரு சிறந்த பிரகாசமான ஒளியுமிழ் சில்லு வகை விளக்கை உருவாக்கணும், அதுவும் எப்போதுமே ஒளி மாறாம ஒளிரணும் என்றால், அது பெரிய சவால்தான்! இதுக்காக பல அறிவியலாளர்கள், பல சிறந்த கண்டுபிடிப்ப பண்ணிருக்காங்க!
நம்ம வீட்ல வெப்ப ஒளிரிகளான குண்டு விளக்குகளுக்கும், உமிழ் ஒளிரிகளுக்கும் (ட்யூப் விளக்கு) பதிலா, ஒளியுமிழ் சில்லுகள (LED விளக்குகள்) பயன்படுத்த தொடங்கி பல நாட்கள் ஆகுது.. ஏன்னா, ஒளியுமிழ் சில்லுகள் மின்சாரத்தை சேமிக்க பயனுல்லது என எல்லோரும் அறிந்ததே. ஆனா அந்த சில்லுகளுக்குள்ள இருக்கும் நிறமாற்றி - பாஸ்பர் (phosphor, பாஸ்பரஸ் இல்லை) அப்படின்னு ஒரு பொருள் அதிகமான வெப்பத்துக்கு பாதிக்கப்பட்டு, நேரம் போகப் போக ஒளி மங்கிடலாம் அல்லது நிறம் மாறலாம்...
எங்கிருந்து வெப்பம் வருது, நிறமாற்றி என்னமாதிரியான
வேலை செய்யுதுன்னு கேக்குறீங்களா?
இதபத்தி அதிகமா தெரிஞ்சிக்க, இதே வலைப்பூவில் முன்பே பதிவிடப்பட்டிருக்கும் கட்டுரைகள
வாசிங்க.. சுருக்கமா சொல்லணும்னா, ஒரு சில்லு ஒளிர அதுல உள்ள குறைக்கடத்திகளுக்கிடையே
எலெக்ட்டான் தாண்டவம் ஆடிட்டி இருக்கும், அதுனால அதுல அதிகமான வெப்பம் உருவாகும். அதேபோல,
நிறமாற்றிய ஏன் பயன்படுத்துறாங்கன்னா, அது ஒரு பெரிய கத.. கொஞ்சம் குட்டி கதயா சொல்ல
முயற்சி பண்றேன்..
ஒரு ஒளியுழ் சில்லு, சில நிறங்களதான் உமிழும்.. ஆனா நம்மோட வாழ்வுங்கிறது பல்லாயிரம்
ஆண்டுகாலமா சூரிய ஒளியோட தயவுலதான் நடந்திருக்கு. அதுனால, நம்மோட சிர்காடியன் ரிதம
– அப்டின்னா என்னான்னு துணை கேள்வியெல்லாம் கேக்கப்படாது.. சிர்காடியன் ரிதம்னா – ஒரு
சீரான இசைவு என்று மொழிபெயர்க்கலாம். ஒரு இசைக்கு இதுவரைக்கும் ஆடி பழக்கப்பட்டுட்டு,
திடீர்னு ஒரு புது இசைய போட்டா, நம்ம காலு ஆடுமோ.. தடுமாறும். அதேமாதிரி, சூரியனோட
வெள்ளை ஒளில வாழ்வ சிவனேன்னு நடத்திக்கிட்டு இருக்குற நம்ம உடம்பு, திடீர்னு ஒரு நிறத்த
மட்டும் வச்சி ஒளி உருவாக்குனா, ஏத்துக்குமா.. ஏத்துக்காது, அதுனால அந்த ஒளியுமிழ்
சில்லுகளோட நிறத்த வெள்ளையா மாத்தனும். ஃபேரன் லவ்லி, ஃபேர் எவெர் போட்டா வெள்ளையாகிடிமா…!
ஆகாது இல்லையா… அதனாலதான், நிறமாற்றிகள அந்த சில்லுகள் மேல பொருத்திடுறாங்க. சில்லுலேர்ந்து
வர நிறம் குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறமா இருந்தாலும், அத நீளமான அலைகளா மாத்தி மஞ்ச
நிறம் கலந்த சிவப்பா மாத்திடும் அந்த நிறமாற்றிகள்.. அந்த மஞ்ச நிறம் கலந்த சிவப்போட,
நீல நிறம் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடச்சிடும். கை தட்டாதீங்க.. இன்னும் கத முடியல..
ஓ,.. கொசுவ அடிக்கிறீங்களா… செரி, செரி கதய தொடந்து வாசிங்க..
அந்த வெப்பம் இருக்கே, அது அந்த நிறமாற்றிகள சிதச்சிடுச்சின்னா… ஏன் சிதைக்குதுன்னா..
ஏன்னா, என்ன இருந்தாலும் அதுவும் ஒரு வேதிப்பொருள்தானே, அதுக்கும் இருக்கும்தானே அச்சம்,
மடம், நாணம், அப்புறம் என்ன.. பயிர்ப்பூஊஊஊஊ….
நிறமாற்றியோட வெப்பத்த தாங்கமுடியாத பண்பு காரணமா, இந்த பிரச்சனைய நாம எதிர்கொள்ளவேண்டியதா
இருக்கு. இந்த பிரச்சனைக்கு பல தீர்வுகள ஆய்வாளர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தாலும், ஒரு
மிகமுக்கிய தீர்வா அமைவது என்னன்னா, ரிமோட் பாஸ்பர்..
டீவி ரிமோட் மாதிரியேதான், தூரத்துல இருந்து நீங்க டிவியோட சாளரத்த மாத்தமுடியும்னா,
நிறத்த மாத்த முடியாதா என்ன.. அத செய்றதுக்கு, நிறமாற்றிய ஒரு மெல்லிய தகடுமோல செஞ்சி
அத, சில்லோட தொடர்புல இருக்குறமாதிரி பொருத்தாம, கொஞ்சம் இடைவெளி விட்டு பொருத்தும்போது,
சில்லோட நிறம் மட்டும் அதுமேல பட்டு, வெள்ளை நிறத்த கொடுக்கும். சில்லுல உருவாகுற வெப்பம்,
அது மேல படுறதுக்குள்ள அந்த வெப்பநிலை குறையுறதுனால, வெப்பத்தால ஏற்படும் பிரச்சன இல்லாம
போகும்.
எங்களோட குழுவும், அந்த ரிமோட் நிறமாற்றிகள உருவாக்குற ஆய்வுகள செஞ்சிகிட்டு வறோம்..
அத பத்தி மேலும் தெரிஞ்சிக்க, கீழ இருக்க இணைப்ப ஒரு தட்டு தட்டுங்க..
1.
2. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0272884213013643
3. https://pubs.rsc.org/en/content/articlelanding/2015/ra/c5ra05362e/unauth
4. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0254058422006356
5. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022231320316318
6. 10.1007/s12200-025-00150-w.
-சகா..